Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் கொலம்பியா வெற்றி – அதிபர் கொண்டாட்டம்

உலகக் கிண்ணம் கொலம்பியா வெற்றி – அதிபர் கொண்டாட்டம்

516
0
SHARE
Ad

Handout photo released by Presidency of Colombia on, 28 June 2014, showing Colombian President, Juan Manuel Santos (C), celebrating in the city of Cartagena, Colombia, after a goal against Uruguay in the Round of 16 of the FIFA World Cup 2014 at the Maracana Stadium in Rio de Janeiro, Brazil.

ரியோ டி ஜெனிரோ, ஜூன் 29 – நேற்று பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரின் மராக்கானா அரங்கத்தில் நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டங்களின்போது பலம் பொருந்திய உருகுவே குழுவை 2-0 கோல் கணக்கில் வீழ்த்தி,  கொலம்பியா கால் இறுதி ஆட்டங்களில் நுழைந்துள்ளது.

காற்பந்து உலகில் கொலம்பியாவின் வெற்றி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், கொலம்பியா நாட்டு மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று நடைபெற்ற ஆட்டத்தை, கொலம்பியா நாட்டு மக்களைப் போலவே அந்நாட்டு அதிபர் ஜூவான் மானுவல் சந்தோஸ், கொலம்பியா விளையாட்டாளர்களின் சீருடையை அணிந்து கொண்டு பார்த்து ரசித்த, இந்த புகைப்படத்தை கொலம்பிய அதிபர் மாளிகை நேற்று வெளியிட்டது.

கொலம்பியா நாட்டின் விளையாட்டாளர் ஜேம்ஸ் கோல் அடித்தவுடன்  எழுந்து நின்று கொலம்பிய அதிபர் தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் காட்சியை இந்த புகைப்படத்தில் காணலாம்.

படம்: EPA