Home அவசியம் படிக்க வேண்டியவை சீனா – உலகக் கிண்ணத்தின் உண்மையான வெற்றியாளர்!

சீனா – உலகக் கிண்ணத்தின் உண்மையான வெற்றியாளர்!

551
0
SHARE
Ad

yinglisolarபெய்ஜிங், ஜூன் 30 – பிரேசிலில் நடைபெற்று வரும் உலக் கிண்ண காற்பந்து போட்டிகளில் கிண்ணத்தை வெல்வதற்காக 32 நாடுகள் களமிறங்கி கடுமையாக போட்டியிடுகின்றன.

இதில் இறுதியில் யார் வெற்றி பெறுவார் என்பது இறுதி ஆட்டம் நடைபெறும் போது தான் தெரியும் என்றாலும், உலக கிண்ண காற்பந்து போட்டிகளை பொறுத்தவரையில்,  உண்மையான வெற்றியாளர் சீனா தான்.

உங்களுக்கு இது ஆச்சர்யமாக இருக்கலாம்.

#TamilSchoolmychoice

போட்டியில் விளையாடாத சீனா எப்படி வெற்றியாளராக முடியும் என நினைக்கலாம்.

ஆனால், பொருட்களின் உற்பத்தி தயாரிப்புத் துறையில் எதையுமே பிரமாண்டமாக தயாரித்து உலகின் முன்னணி உற்பத்தி நாடாக திகழும் சீனா, இந்த உலக் கிண்ண காற்பந்து போட்டிகளின் மூலம் அதிகமாக பலனடைந்த நாடாக கருதப்படுகிறது.

யிங் லீ நிறுவனத்தின் பிரவேசம்

உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளில் பங்குபெறக் கூடிய தகுதிச் சுற்று ஆட்டங்களில் சீனா தோல்வியுற்றாலும், பல சீன வணிக நிறுவனங்கள் இந்த காற்பந்து போட்டி ஏற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளன.

குறிப்பாக ‘யிங்லி கிரீன் எனர்ஜி ஹோல்டிங்ஸ்’ என்ற எரிசக்தி மறுசுழற்சி நிறுவனம் சூரிய கதிர் மூலம் எரிசக்தியை உருவாக்கும் சூரிய ஒளி, சூரிய கதிர் தகடுகளை பிரேசிலின் சில காற்பந்து அரங்குகளில் பொறுத்தும் பணிகளை மேற்கொண்டது.

இதன்காரணமாக மெக் டோனால்ட், விசா போன்ற மாபெரும் நிறுவனங்களுடன் யிங் லி நிறுவனத்தின் பெயரும் காற்பந்து அரங்கை சுற்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில் இடம்பெற்றுள்ளது.

இதுமட்டுமல்லாமல், இந்த காற்பந்து போட்டிகளில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படும் பிரே ஜூக்கா என்ற பெயர் தாங்கிய காற்பந்தை தயாரிக்கும் உரிமையும் சீன நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டது. மேலும் எண்ணற்ற நினைவுச் சின்னங்கள், அடையாளச் சின்னங்கள், தேசியக் கொடிகள் ஆகியவற்றை லட்சக்கணக்கில் தயாரிக்கும் குத்தகைகளையும் சீன நிறுவனங்களே பெற்றன.

விலை மலிவாகவும் துரிதமாகவும் அதேவேளையில், குறுகிய காலத்தில் பிரமாண்டமான எண்ணிக்கையிலும் தயாரித்து தரும் ஆற்றல் சீன நிறுவனங்களுக்கே உள்ளது என்பதால் இதுபோன்ற குத்தகைகள் அனைத்தையும் அந்த நிறுவனங்களே பெற்றன.

சில புகழ்பெற்ற வணிக முத்திரை கொண்ட நிறுவனங்கள் தங்களின் பொருட்களை உலக் கிண்ண காற்பந்து போட்டிகளை மையமாக வைத்து அதிகளவில் தயாரிப்பதற்கு சீன நிறுவனங்களை பயன்படுத்திக் கொண்டுள்ளன.

ஒரு சில பொருட்களின் துணை பாகங்கள் மற்றும் உதிரி பாகங்களை பெரிய அளவில் தயாரிக்கும் குத்தகைகளையும் சீன நிறுவனங்கள் பெற்றன. இதுபோன்ற வணிக முயற்சிகளின் காரணமாக சீனா இந்த உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளின் மூலம் வணிக ரீதியாக அதிக பயன்களை அடையும் நாடாக திகழ்கிறது.

உலகின் மிகப் பெரிய தொழிற்சாலையாக மாறிவிட்ட சீன தேசம் இனிவரும் இதுபோன்ற உலகப் போட்டிகளிலும் நினைவுச் சின்னங்கள் சம்பந்தப்பட்ட பொருட்கள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் என வணிக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.