Home உலகம் ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் 152 இலங்கை அகதிகள்!

ஆஸ்திரேலியா அருகே நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் 152 இலங்கை அகதிகள்!

463
0
SHARE
Ad

28-melbourne-map-600

மெல்போர்ன், ஜூன் 30 – ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளாக படகில் சென்ற 152 இலங்கைத் தமிழர்கள் நடுக்கடலில் மீட்க வழி இல்லாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தும், வெளிநாடுகளில் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக அடைக்கலம் கேட்டு செல்லும் அவலம் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

#TamilSchoolmychoice

இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 152 இலங்கைத் தமிழர்கள் ஒரு படகில் ஆஸ்திரேலியா நோக்கி கடந்த 13-ந் தேதி புறப்பட்டுச் சென்றனர். அவர்களின் படகு, ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து 300 கி.மீ. தொலைவில், நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீர் எண்ணெய் கசிவு ஏற்பட்டது.

நடுக் கடலில் தத்தளிக்கும் படகினை மீட்குமாறு அவர்கள் ஆஸ்திரேலிய அரசிடம் உதவி கேட்டு தவிக்கின்றனர். இது குறித்து அந்த படகில் பயணம் செய்யும் டியூக் என்பவர் கூறுகையில், “படகில் 32 பெண்கள், 37 குழந்தைகள் என மொத்தம் 152 பேர் உள்ளோம். இலங்கையில் இருந்து வருகிறோம்.

இந்தியாவில் வாழ இயலாத சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் ஆனோம். எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் படகு நடுக் கடலில் சிக்கியுள்ளது. எங்களை மீட்க ஆஸ்திரேலிய அரசு உதவி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.  இந்த தகவலை ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.