Home நாடு சான்விட்ச் தீவுகளின் தென் பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

சான்விட்ச் தீவுகளின் தென் பகுதியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

645
0
SHARE
Ad

Earthquake2கோலாலம்பூர், ஜூன் 30 – நேற்று மாலை 3.53 மணியளவில், 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சான்விட்ச் தீவுகளின் தெற்கே தாக்கியதாக மலேசிய வானிலை மற்றும் புவியியல் ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.

ஜோகூர் மாநிலத்தின் பொந்தியான் பகுதியில் இருந்து சுமார் 12,626 கிலோமீட்டர் தென்மேற்கிலும், சிலி நாட்டின் புருதோ மொத் பகுதியிருந்து 3,540 கிலோமீட்டர் தென்கிழக்கிலும் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஆபத்து எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice