Home உலகம் ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – 16 பேர் பலி?  

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – 16 பேர் பலி?  

465
0
SHARE
Ad

ukraine military heliமாஸ்கோ, ஜூலை 01 – 18 பேர் பயணம் செய்த ரஷ்யாவின் ‘எம்ஐ-8’ (Mi-8) ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு ஏரியில் நொறுங்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 16 பயணிகள் காணவில்லை என்று கூறப்படுகின்றது. இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள காபரோவ்ஸ்க் வட்டாரத்தில் தீயணைப்பு படை வீரர்கள் நேற்று எம்ஐ-8 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் திடீரென சேகுண்டா கிராமத்தின் அருகில் உள்ள ஏரியில் விழுந்து நொறுங்கியது.

ஹெலிகாப்டரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மோசமான பராமரிப்பு காரணமாக அடிக்கடி விமான விபத்துக்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.