Home வணிகம்/தொழில் நுட்பம் இங்கிலாந்து ஊழியர்களுக்கு இனி வீட்டில் தான் வேலை!

இங்கிலாந்து ஊழியர்களுக்கு இனி வீட்டில் தான் வேலை!

446
0
SHARE
Ad

busலண்டன், ஜூலை 01 – இங்கிலாந்தில் உள்ள 20 மில்லியன் ஊழியர்களும் வீடுகளில் இருந்தே தங்கள் பணிகளை செய்வதற்கான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இங்கிலாந்தில் இதுவரை பெற்றோர்களும், பிறரை கவனித்துக்கொள்ள வேண்டிய கடமையைக் கொண்டவர்களும் மட்டுமே தங்களது வேலை நேரங்களில் சிறப்பு சலுகைகளைப் பெற்று வந்தனர். இதன் அடிப்படையில் சுமார் 10 மில்லியன் ஊழியர்கள் இவ்வாறான முறைகளில் வேலை செய்து வந்தனர்.

ஆனால் நேற்றுமுதல் அங்கு நடைமுறைக்கு வந்துள்ள புதிய வேலை நேர விதிமுறைகளின்படி நாடு முழுவதிலும் உள்ள 20 மில்லியன் ஊழியர்கள் இத்தகைய சலுகைகளைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்வது உட்பட பல வசதிகளைப் பெறமுடியும்.

#TamilSchoolmychoice

cycleஇது பற்றி அந்நாட்டின் வேலை உறவுகள் தொடர்பான அமைச்சர் ஜோ ஸ்வின்சன் கூறுகையில், “இத்தகைய விதிமுறைகள் ஊழியர்களை மகிழ்ச்சியாக மாற்றுவதால் உற்பத்தித் திறன் உயர்ந்து நாட்டின் பொருளாதாரம் மேம்படும்”

“மேலும், இந்த புதிய முறையின் மூலம் ஐந்து நாட்களில் முடிக்கவேண்டிய வேலையை நான்கு நாட்களில் முடிப்பது, நெருக்கடி மிகுந்த போக்குவரத்திலிருந்து விடுபட கூடுதல் நேரம் வேலை செய்வது போன்ற சூழ்நிலைகள் அதிகரிக்கக்கூடும்” என்று அவர் குறிப்பிட்டார்.

தங்களுடைய ஊழியர்களின் உத்வேகத்தையும், உற்பத்தித் திறனையும் இந்த புதிய நடைமுறைகள் அதிகரிக்கும் என்பதால் அவர்கள் பணியிலிருந்து விலகமாட்டார்கள் என்று முதலாளிகளும் கருதுகின்றனர்.