Home இந்தியா புதிய கட்சி ஆரம்பித்தார் பழ நெடுமாறன்!

புதிய கட்சி ஆரம்பித்தார் பழ நெடுமாறன்!

567
0
SHARE
Ad

nedumaranதஞ்சாவூர், ஜூலை 1 – தமிழர் தேசிய முன்னணி என்ற பெயரில் புதிய கட்சியை பழ நெடுமாறன் ஆரம்பித்துள்ளார். தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ நெடுமாறன் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ”தமிழகத்தில் உள்ள தேசிய உணர்வாளர்கள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புகளை இணைத்து தமிழர் தேசிய முன்னணி என்ற புதியக் கட்சியைத் துவக்கியுள்ளோம்.

இதற்கு தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்” என்றுத் தெரிவித்தார். மேலே நீல வண்ணமும், கீழே மஞ்சள் வண்ணமும் கொண்ட கட்சிக் கொடியும் அறிமுகம் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

நீலம் என்பது உலகம் முழுவதும் பரவி இருக்கும் தமிழர்களையும், மஞ்சள் என்பது தமிழர்களின் வீரம், பண்பாட்டையும் குறிக்கும் என பழ நெடுமாறன் தெரிவித்தார். விரையில் இது அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட உள்ளது.