அமீர்கான், அபிஷேக் பச்சான், உதய் சோப்ராவோடு இந்திப் படவுலகின் கவர்ச்சிக் கதாநாயகி கத்ரினா கைஃப் நடித்து வெளிவந்த தூம் 3 உலகமெங்கும் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் வசூலை வாரிக் குவித்த படமாகும்.
கடந்த 2011இல் மாண்டரின் மொழியாக்கம் செய்யப்பட்டு சீனாவில் வெளியிடப்பட்ட ‘3 இடியட்ஸ்’ படம் 3 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அமீர்கான் சீன தேசத்தில் பிரபலமான நட்சத்திரமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதே ‘3 இடியட்ஸ்’ படம்தான் தமிழில் விஜய் நடிக்க ‘நண்பன்’ என்ற பெயரில் வெளியானது. அமீர்கானின் இரட்டை வேட நடிப்பில் உருவான ‘தூம் 3’ சர்க்கஸ் கலைஞனாகப் பணிபுரியும் கதாநாயகன் இரவு வேளைகளில் சாகசங்கள் புரிந்து வங்கிக் கொள்ளைக்காரனாக மாறுவதைக் கூறும் கதையம்சம் கொண்ட படமாகும்.
533 கோடி ரூபாய் வரை உலகமெங்கும் வசூல் செய்து இதுவரை வெளியான இந்தியப் படங்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்த படம் என்ற முத்திரையை தூம் 3 பதித்திருக்கின்றது.