ஒருநாள் ஓய்வுக்கு பிறகு 2–வது சுற்று ஆட்டங்கள் 28–ஆம் தேதி தொடங்கின. அந்த சுற்றில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
இன்றுடன் 2–வது சுற்று ஆட்டமும் முடிகிறது. மலேசிய நேரப்படி இன்று இரவு 12.00 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் அர்ஜென்டினா– சுவிட்சர்லாந்து மோதுகின்றன. அர்ஜென்டினா கால் இறுதிக்கு நுழையும் ஆர்வத்துடன் உள்ளது.
இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் பெல்ஜியம் 4 போட்டியிலும், அமெரிக்கா ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டிகளுடன் 2–வது சுற்று ஆட்டமும் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.