Home வணிகம்/தொழில் நுட்பம் இந்திய இணைய வர்த்தகத்தில் அதிகரித்து வரும் தகவல் திருட்டு!

இந்திய இணைய வர்த்தகத்தில் அதிகரித்து வரும் தகவல் திருட்டு!

731
0
SHARE
Ad
hacking

பெங்களூரு, ஜூலை 1 – இந்தியாவில் இணைய வர்த்தகம் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இணைய வர்த்தகங்களுக்கான இணைய தளங்களைத் தாக்கி பயனர்களின் தரவுகள் மற்றும் தகவல்களைத்  திருடுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இது குறித்து அகமாய் எனும் இணைய வர்த்தக நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, “இந்தியாவில் முதல் காலாண்டில் 2.6 சதவீதம் அளவிற்கு தகவல் திருட்டு அதிகரித்து உள்ளது. ஹேக்கர்கள், அதிவேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் இணைய வர்த்தகத்தில், பெரும் பணப்புழக்கம் இருப்பதை அறிந்து கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் செயல்பட்டு வரும் இணைய வர்த்தக நிறுவனங்கள் இதுவரை இது குறித்து பெரிய அளவிலான புகார்கள் அளிக்காத நிலையில், ஜபாங் நிறுவனம் முதன் முறையாக இதனை ஒத்துக் கொண்டுள்ளது. ஆனால் அந்நிறுவனம், இந்த தகவல் திருட்டு மூலமாக தங்கள் நிறுவனத்திற்கு பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

இணையத்தின் மூலமாக தகவல் திருட்டை நிகழ்த்த விரும்புவோர், பயனர்களின் கணக்குகளுக்கு போலியான பக்கங்களில் இருந்து சில கோரிக்கைகளை அனுப்புவர். பயனர்கள் அது பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் அதனை அணுகும் பட்சத்தில், பயனர்களின் தனிப்பட்ட ஐபி முகவரியை திருடி தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

உலக அளவில், இணையம் வழியாக பெரும் வர்த்தகம் நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும் நிலையில், தகவல் திருட்டுகள் எத்தகையா பின் விளைவுகளை ஏற்படுத்து எனத் தெரியவில்லை.

இணைய வர்த்தக நிறுவனங்கள், ஒரு பொருளை வாங்கும் பொழுது பயனர்களின் அடிப்படை தகவல்கள் முதல் வங்கி கணக்குகள் வரை அனைத்து தகவல்களை பெற்றுக் கொள்கின்றன. இது தகவல் திருட்டை நிகழ்த்துவோருக்கு மட்டும் அல்லாமல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோறுக்கும் பெரும் வாய்ப்பாக இருக்கும் என்பது மட்டும் நிதர்சனம்.