Home நாடு ஜப்பானீஸ் வைரஸ் தாக்கம்: பன்றிகளின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன!

ஜப்பானீஸ் வைரஸ் தாக்கம்: பன்றிகளின் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன!

637
0
SHARE
Ad

கப்பளா பத்தாஸ், ஜூலை 2 – பினாங்கில் பள்ளி மாணவர் ஒருவருக்கு ஜப்பானீஸ் இன்செப்தலீஸ் (Japanese Encephalitis) வைரஸ் கிருமி தாக்கியது தொடர்பான சம்பவம் தொடர்பில் பன்றிகள் காரணமாக இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் உள்ள பன்றிகளின் இரத்தம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பேராக் மாநில கால்நடைத்துறை அதிகாரி டாக்டர் அப்துல் ஜோஹரியின் கூறுகையில், மொத்தம் 40 அதிகாரிகள் 19 பன்றி பண்ணைகளை சோதனியிட்டுள்ளனர். அங்கு 190 பன்றிகளின் இரத்த மாதிரிகளை எடுத்து அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

pjfJE300614A4

#TamilSchoolmychoice

(பினாங்கிலுள்ள ஒரு பன்றிப் பண்ணை)

இப்பரிசோதனையின் முடிவு வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று நம்பப்டுகின்றது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட அம்மாணவனின் மூளை செயலிழந்து சுயநினைவு இன்றி இருப்பதாக டாக்டர் வோங் லீ சோ தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, இந்த வைரஸ் கிருமி மேலும் பரவாமல் இருக்க பல முன்னேற்பாடுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

விலங்கு, பறைவைகளை கடிப்பதால் பாதிக்கப்பட்ட க்யூலெக்ஸ் கொசுக்கள், மனிதர்களை கடிப்பதன் மூலம் இந்த ஜெஇ வைரஸ் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.