Home நாடு பினாங்கில் 2 வயது சிறுமிக்கு ஜெஇ வைரஸ்!

பினாங்கில் 2 வயது சிறுமிக்கு ஜெஇ வைரஸ்!

517
0
SHARE
Ad

culex-tarsalis-mosquitoபட்டர்வொர்த், ஜூலை 3 – “கியூ லெக்ஸ்’ எனும் ஒரு வகை கொசுக்களால் ஏற்படும் மூளை வீக்கம் நோய், பினாங்கில் ஏற்கனவே சிறுவன் ஒருவனைத் தாக்கியிருந்த நிலையில், தற்போது 2 வயது சிறுமியையும் தாக்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

பாகான் ஜெர்மாலில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு வந்த போது அவருக்கு ஜெஇ வைரஸ் தாக்கியுள்ளது கண்டரியப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 24 -ம் தேதி, எடுக்கப்பட்ட இரத்தப் பரிசோதனையில் அச்சிறுமிக்கு ஜெஇ வைரஸ் தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என பினாங்கு மாநில சுகாதாரத்துறை இயக்குநர் டத்தோ டாக்டர் லைலானோர் இப்ராகிம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த ஜூன் 13 -ம் தேதி, அச்சிறுமி செபராங் ஜெயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கவலைக்கிடமான நிலையில் பினாங்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அச்சிறுமியில் நிலை ஓரளவு அபாயக்கட்டத்தை தாண்டியவுடன் கடந்த ஜூன் 18 -ம் தேதி பொதுப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.

இதனிடையே இந்நோயின் தாக்கம் குறித்து கருத்துரைத்த சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், பன்றி, குதிரை போன்ற விலங்குகளிலிருந்து பரவும் இக்கிருமி, ‘கியூலெக்ஸ்’ எனும் கொசு கடிப்பதன் மூலம் மனிதர்களிடையே பரவுகிறது என்றும், இந்த நோய்க்கான காய்ச்சல் அறிகுறிகள் எளிதில் புலப்படுவதில்லை என்றும் நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் மலேசியாவில் இது நாள் வரை இந்நோய்க்கு 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 4 மரண சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன என்றும் சுப்ரா குறிப்பிட்டார்.

மலேசிய சுகாதார அமைச்சு, மலேசிய கால்நடை துறையுடன் இணைந்து இந்நோயைக் கட்டுப்படுத்த பல தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் சுப்ரா தெரிவித்தார்.