சர்கோசி தனது பதவி காலத்தில் லிபியாவின் முயம்மர் கடாபியிடமிருந்து சட்ட விரோதமாக 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை பிரச்சார நிதியாக வாங்கினார் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை ஊழல் பிரிவு அதிகாரிகள் விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
வரும் 2017-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற உள்ள அடுத்த அதிபருக்கான தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த சர்கோசியின் நம்பிக்கையை இந்த ஊழல் வழக்கு தகர்த்துள்ளது.