Home உலகம் டிவிட்டரில் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி போப்பாண்டவர் முதலிடம்!

டிவிட்டரில் ஒபாமாவை பின்னுக்கு தள்ளி போப்பாண்டவர் முதலிடம்!

686
0
SHARE
Ad

pope-francisவாடிகன், ஜூலை 2 – டிவிட்டரில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் போப்பாண்டவர் பிரான்சிஸ். பாலோயர்கள் எண்ணிக்கையில் பார்த்தால் ஒபாமாதான், போப்பாண்டவரை விட முதலிடத்தில் இருக்கிறார்.

pope francis twitterஆனால் ரீட்வீட்கள் வரிசையில் பார்த்தால் ஒபாமாவை, பின்னுக்குத் தள்ளியுள்ளார் போப்பாண்டவர். இந்த வரிசையில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் மிகவும் பின்னாடி இருக்கிறார். இங்கிலாந்து ராணியோ அவரை விட பின்னால் போயிருக்கிறார்.

obama-twitட்வீப் அதாவது டிவிட்டர் பயனாளிகளிலேயே மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்ற பெயர் போப்பாண்டவருக்குக் கிடைத்துள்ளது. பராக் ஒபாமாவுக்குத்தான் உலக முலுவதும் அதிக அளவிலான பாலோயர்கள் டிவிட்டரில் உள்ளனர்.

#TamilSchoolmychoice

அதற்கு அடுத்த இடம் போப்பாண்டவருக்குத்தான். ஆனால் ரீட்வீட்களைக் கணக்குப் பார்த்தால் ஒபாமாவை விட போப்பாண்டவர்தான் செல்வாக்கானவராக இருக்கிறார். போப்பாண்டவரின் at @Pontifex என்ற பக்கத்தை கிட்டத்தட்ட 1.4 கோடி பேர் பின் தொடருகிறார்கள். அவர் போடும் ஒவ்வொரு டிவிட்டும், சராசரியாக 17,000 முறை ரீட்வீட் செய்யப்படுகிறது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு டிவிட்டரில் 4.37 கோடி பாலோயர்கள் உள்ளனர். ஆனால், அவரது டிவிட்கள் சராசரியாக 1400 முறைதான் ரீட்வீட் செய்யப்படுகின்றனர். அதாவது போப்பாண்டவரை விட 10 மடங்கு குறைவு இது.

david-camerron-twiter3-வது இடத்தில் இந்தோனேசியா அதிபர் சுசிலோ பம்பாங் யுத்யோயனோ இருக்கிறார். இவருக்கு 50 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் 13-வது இடத்திலும், இங்கிலாந்து ராணி எலிசெபத் 36-வது இடத்திலும் உள்ளனர்.