இதையடுத்து அவர் வாடியாவுக்கு எதிராக போலீசாரிடம் வாக்குமூலமும் அளித்தார். இந்நிலையில் அவர் இது குறித்து ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, “இது வேண்டும் என்றே கொடுக்கப்பட்ட புகார் இல்லை. நான் பொய் சொன்னது இல்லை. அது எனக்கு வரவும் வராது. நான் ஒரு பொறுப்புள்ள குடிமகள்.
பெண்ணாக இருப்பது தான் நான் செய்த ஒரே தவறு. வேலை செய்யும் இடத்தில் நெருக்கமாக இருந்த ஒருவரால் தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டு, மிரட்டப்பட்டு ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் போனது.பெண்களுக்கு எதிரான வன்முறை தவறானது.
நான் புகார் கொடுத்தது குறித்து அறிந்த பத்திரிகைகள் அதை பெரிதாக்கிவிட்டது. அதற்கு நான் என்ன செய்ய முடியும். நான் என்ன பத்திரிகையாளர்களை சந்தித்தேனா? இல்லையே.
நான் மக்கள் மற்றும் பத்திரிகைகளை என் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பு அளிக்குமாறு தான் கேட்டுக் கொண்டேன்” என்று பிரீத்தி தெரிவித்துள்ளார்.