Home இந்தியா உலகின் 2ஆவது பிரபலமான அரசியல்வாதி மோடி: பேஸ்புக் அதிகாரி புகழாரம்!

உலகின் 2ஆவது பிரபலமான அரசியல்வாதி மோடி: பேஸ்புக் அதிகாரி புகழாரம்!

522
0
SHARE
Ad

sheryl-sandbergபுதுடில்லி, ஜூலை 3 – 18 மில்லியன் பேஸ்புக் இணையப்பக்க நண்பர்களை பெற்று உலகின் 2-ஆவது பிரபலமான அரசியல்வாதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார் என்று சமூக வலை தளமான பேஸ்புக்கின் மூத்த அதிகாரி ஷேர்ல் சண்ட்பெர்க் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,“உலகின் இரண்டாவது பிரபலமான அரசியல்வாதியாக மோடி  இருக்கிறார். அவருக்கு பேஸ்புக்கில் 18 மில்லியனுக்கும் மேற்பட்டோர் நண்பர்களாக உள்ளனர்.

மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு தனது தாயாரிடம் ஆசி வாங்கிய படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில்  பதிவு செய்திருந்தார். தனிப்பட்ட முறையில் அதுதான் எனக்கு பிடித்த புகைப்படமாகும். மோடியை போன்ற அரசியல்வாதிகள் சமூக வலைதளத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

#TamilSchoolmychoice

narendra_modi_facebookபேஸ்புக்கின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவாக உள்ளது. பேஸ்புக் மூலம் வன்முறையை தூண்டுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. இன்னும் பில்லியன் கணக்கான இந்தியர்களை பேஸ்புக்கில் இணைக்க வேண்டியுள்ளது.

பெரும்பாலான இந்தியர்கள் செல்பேசியில்தான் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். தேர்தலின் போது இந்தியாவின் பேஸ்புக் பயன்பாடு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இந்தியா, உலகம் முழுவதும் தனது தொழில் பங்களிப்பை அளித்து வருகிறது என ஷேர்ல் சண்ட்பெர்க்  தெரிவித்தார்.