Home நாடு பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு!

பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு!

700
0
SHARE
Ad

Malaysian diplomat extradited over alleged sexual assault in New Zealandகோலாலம்பூர், ஜூலை 3 -நியூசிலாந்து பெண்ணிடம் பாலியல் வல்லுறவு மற்றும் கொள்ளை முயற்சி செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி ரிஸல்மானை மீண்டும் நியூசிலாந்திடமே ஒப்படைக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு குறித்து நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மூரே மெக்குலிக்கு, மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிஃபா அமான் (படம்) தகவல் தெரிவித்தார்.

மேலும், மலேசியா மற்றும் நியூசிலாந்து இடையிலான நல்லுறவுக்கு சான்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அனிஃபா நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“நியூசிலாந்து அரசு மற்றும் அந்நாட்டு சட்டத்தின் மீது மலேசியாவிற்கு முழு நம்பிக்கை உள்ளது. மலேசிய தூதரகத்தின் முன்னாள் தற்காப்புத்துறை அதிகாரியான ரிஸல்மான் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தகுந்த முறையில் விசாரணை செய்யப்படும் என நாங்கள் நம்புகின்றோம்” என்று அனீஃபா தெரிவித்தார்.

முகமட் ரிஸல்மான் (வயது 38) நியூசிலாந்தில் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து அவரை கற்பழிக்க முயன்றார் என்று குற்றச்சாட்டப்பட்டு, கடந்த மே 9 -ம் தேதி, அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, மே 12 -ம் தேதி, மலேசியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையிலான பேச்சு வார்த்தையில், சில விதிமுறைகளோடு ரிஸல்மானை மலேசியாவிற்கு அனுப்ப நியூசிலாந்து அரசு ஒப்புக்கொண்டது.

பின்னர், நியூசிலாந்து நாட்டில் இருந்து கடந்த மே 22 -ம் தேதி, ரிஸல்மான் தனது குடும்பத்தினருடன் மீண்டும் மலேசியாவிற்கு திரும்பினார்.

இந்நிலையில், ரிஸல்மானுக்கு எதிரான குற்றச்சாட்டிற்காக, அவர் மீண்டும் நியூசிலாந்திற்கு, தற்காப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த இராணுவ அதிகாரி ஒருவருடன் அனுப்பப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.