Home உலகம் ஜப்பானில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றம்!

ஜப்பானில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றம்!

553
0
SHARE
Ad

Japanடோக்கியோ, ஜூலை 3 – அண்டை நாடுகளுடன் போர் குறித்த வரலாற்று முக்கியதத்துவம் வாய்ந்த தீர்மானத்தை நேற்று முன்தினம் ஜப்பான் அரசு தனது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.

இரண்டாம் உலக போர் நடைபெற்ற போது, அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலுக்கு பல லட்சம் உயிர்களை பலி கொடுத்த ஜப்பான், இனி அண்டை நாடுகளுடன் போர் இல்லை என்ற தீர்மானத்தை 60 -ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவேற்றியது.

அந்த தீர்மானம் ஜூலை 1-ம் தேதியுடன், 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து ஜப்பான் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஷின்சோ அபே தலைமையில் கூடிய அமைச்சர்கள், அண்டை நாடுகளுடன் எப்போதும் போர் இல்லை என்ற ஜப்பானின் 60 ஆண்டு பழமையான தீர்மானத்தை மாற்றி அமைத்தனர்.

#TamilSchoolmychoice

இது ஜப்பான் பிரதமர்  ஷின்சோ அபேயின் அரசியல் வாழ்க்கையில் முக்கிய மைல்கல் என்று கூறப்படுகின்றது. இந்த தீர்மானத்தின் மூலம், ஜப்பான் இனி தனது நட்பு நாடுகளுக்கு போர் அச்சுறுத்தல் ஏற்படும் பொழுதும், ஐ.நா வின் அமைதிப் படையில் பங்களிப்பு தேவைப்படும் பொழுதும் தனது இராணுவத்தைப் பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

பல தரப்பு விமர்சனங்கள் இந்த தீர்மனத்தின் மீது சுமத்தப்பட்டாலும், ஜப்பான் கடல் எல்லைகளில் சீனாவின் தொடர் அச்சுறுத்தலுக்கு இது தக்க பதிலடியாகவே இருக்கும் என்று கூறப்படுகின்றது.

இந்த தீர்மானம் குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறுகையில், “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், ஜப்பான் எப்போதும் அமைதி விரும்பும் நாடு என்ற எண்ணத்தில் மாற்றம் இல்லை.

எந்தவொரு சுதந்திர நாட்டினையும் ஜப்பான் தனது இராணுவ பலத்தால் ஆக்கிரமிக்க நினைக்காது” என்று கூறியுள்ளார். உலகில் இராணுவத்துக்கு அதிகளவு நிதி செலவிடும் 5-வது நாடு ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.