Home வாழ் நலம் இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா பூ!

இதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா பூ!

3839
0
SHARE
Ad

rosasஜூலை 3 – ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்.

ரோஜா இதழ்களை  ஒரு கையளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு  ஒரு டம்ளர்  தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து  இறக்கி வடிகட்டி, அதில் பாதியை எடுத்துச் சர்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல், மூலச்சூடு தணியும்.

ரோஜா மொட்டுகளை ஒரு கையளவு எடுத்துக்கொண்டு, அதை அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும். இதே போல் மூன்றே நாட்கள் சாப்பிட்டால் சீத பேதி குணமாகும்.

#TamilSchoolmychoice

pink-rose-flower-hd-desktop-wallpaperபித்தம் காரணமாகக் கிறுகிறுப்பு, குமட்டல், வாந்தி நெஞ்செரிவு மற்றும் பித்தக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு ருசிக்காக தேவையான அளவு சர்கரை சேர்த்துக் காலையில் ஒரு டம்ளர் அளவும், மாலையில் ஒரு டம்ளர் அளவும்,  கலக்கிக் குடித்து விட வேண்டும். இந்த விதமாக ஏழு நாட்கள் செய்து வந்தால் பித்தம் அறவே நீங்கி விடும்.

roses-4eரோஜா இதழ்கள் கால் கிலோ எடுத்து ஒரு சீசாவில் போட்டு, 150 கிராம் சுத்தமான தேனை அதில் விட்டு நன்றாகக் கிளறி வெய்யிலில் வைத்து விட வேண்டும். இதை காலையில் ஒரு தேக்கரண்டி, மாலையில் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட வேண்டும். இந்த விதமாக இரத்தபேதி நிற்கும் வரை சாப்பிட வேண்டும்.

இதைத் தயாரிக்கச் சிரமமாகத் தோன்றினால் தமிழ் மருந்துக் கடைகளில் குல்கந்து என்று கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கி இதே அளவு சாப்பிட்டு வர வேண்டும்.

roseஒரு சிலருக்கு அடிக்கடி தும்மல் வரும். இதை நிறுத்த ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்களை பாத்திரத்தில் போட்டு, அரை டம்ளர் அளவு தண்ணீர் விட்டுச் சுண்டக் காய்ச்சி அந்தத் தண்ணீரை இறுத்து, சீரகத்தில் ஒரு தேக்கரண்டியளவு அரைத்து ஒரு சுத்தமான துணியில் நனைத்து முகர்ந்து கொண்டேயிருந்தால் தும்மல் நிற்கும்.

ரோஜா பூ பன்னீரை கண்கள் சிவந்து எரிச்சில் இருக்கும் நேரம் சில துளிகள் விட்டு வந்தால் எரிச்சல் மாறும். கண் நோய் சம்பந்தமான மருந்துகள் தயாரிக்க பன்னீர் பயன்படுகிறது. சிலருக்கு அதிக வியர்வையின் காரணமாக உடலில் துர்நாற்றும் ஏற்படும். இவர்கள் குளிக்கும் நீரிடன் பன்னீரைக் கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.