Home கலை உலகம் வரும் 18-ஆம் தேதி தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ வெளியாகிறது!

வரும் 18-ஆம் தேதி தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ வெளியாகிறது!

589
0
SHARE
Ad

Velai-Illa-Pattathariசென்னை, ஜூலை 3 – நடிகர் தனுஷின் 25-வது படம் என்ற எதிர்பார்ப்போடு தயாரான “வேலையில்லாத பட்டதாரி” படம் வரும் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது.

தேசிய விருது வாங்கிய நடிகரான தனுஷின் சமீபத்திய படங்களான மயக்கம் என்ன, மரியான், நய்யாண்டி போன்றவை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.

valaiilla pattathariஎனவே, தொடர் தோல்வியை சரி செய்யும் வகையில் தனது புதிய படங்கள் அமைய வேண்டும் என போராடி வருகிறார் தனுஷ். அந்தவகையில் தற்போது அவர் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி வரும் 18-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

தனுஷ், அமலாபால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் “வேலையில்லா பட்டதாரி”. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கௌரவ தோற்றத்தில் தோன்றிய சில படங்களை தவிர்த்து தனுஷ் நடிப்பில் வெளியாகும் 25-வது படம் “வேலையில்லா பட்டதாரி”. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டிரைய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Why-Velaiyilla-Pattatharisஇது தவிர நடிகை அமலாபால், இயக்குநர் விஜயைத் திருமணம் செய்த பின்னர், அவர் நாயகியாக நடித்து வெளியாகும் முதல் படம் இது தான். எனவே, இதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இப்படம் தவிர தனுஷ் அனேகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பில் காயமடைந்த தனுஷ், தற்போது மீண்டும் பட வேலைகளில் பிசியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.