Home தொழில் நுட்பம் ஒலி கோர்ப்பு செயலியான சாங்ஸாவை வாங்கியது கூகுள்!

ஒலி கோர்ப்பு செயலியான சாங்ஸாவை வாங்கியது கூகுள்!

578
0
SHARE
Ad
Google-PLay-Music

ஜூலை 4 – கூகுள் நிறுவனம், வட அமெரிக்காவைச் சேர்ந்த இசை சேர்ப்பு மற்றும் ஒலி கோர்ப்பு செயலியான ‘சாங்ஸா’ – Songza வை வாங்கியதாகக் கடந்த செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. ஒலி கோர்ப்பு மட்டுமல்லாமல் வானொலி சேவையையும் செய்து வரும் சாங்ஸா, கால சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பாடல்களை ஒலி பரப்பு செய்வதில் திறம் பட செயல்பட்டு வருகின்றது.

இசைப் பிரியர்களுக்காக கூகுள் உருவாக்கி உள்ள ‘கூகுள் ப்ளே மியூசிக்’ (Google Play Music) செயலியில் முக்கிய பங்கு ஆற்ற இருக்கும் சாங்ஸா, பயனர்களின் விருப்பங்களுக்கு இணங்க எந்தவொரு குறுக்கீடும் இன்றி சுதந்திரமாக  செயல்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

Google-Songza

#TamilSchoolmychoice

சமீப காலங்களில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களான ஆப்பிள், டுவிட்டர் போன்றவை ஒலி மற்றும் இசை சேர்ப்பு துறைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டே கூகுள் இந்த முயற்சியை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக கூகுள் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஆப்பிள் சமீபத்தில் ‘பீட்ஸ் மியூசிக்‘ (Beats Music) நிறுவனத்தை சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கைப்பற்றியது. இதற்கு போட்டியாகவே சாங்ஸா வாங்கப்பட்டதாக கூகுள் வட்டாரங்கள் கூறுகின்றன.

கூகுள் ப்ளே ஸ்டோரில் பலதரப்பட்ட ஸ்ட்ரீமிங் செயலிகள் இருந்தாலும், சாங்ஸா செயலியின் தனித் தன்மையின் காரணமாக, கூகுள் அதற்கு முன்னுரிமை தருவதாகக் கூறப்படுகின்றது.