Home தொழில் நுட்பம் பேஸ்புக் காணொளிகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

பேஸ்புக் காணொளிகளை பதிவிறக்கம் செய்வது எப்படி?

663
0
SHARE
Ad

videos-violentos-facebookகோலாலம்பூர், ஜூலை 4 – யூ டியுப் காணொளிகளை (வீடியோ) பதிவிறக்கம் செய்வதற்கு எளிய வழிகள் உள்ளதைப் போன்றே பேஸ்புக்கில் நண்பர்களால் பகிரப்படும் காணொளிகளையும் எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

பேஸ்புக்கின் காணொளிகளை பதிவிறக்கம் செய்ய சில இலவச மென்பொருட்கள் உள்ளன.ஆனால் அம்மென்பொருட்களை பதிவிறக்கம் செய்து அதை கணினியில் நிறுவிய பிறகே பயன்படுத்தமுடியும்.

சுலபமாக பேஸ்புக்கின் காணொளிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனில் கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தை பயன்படுத்தலாம்.

#TamilSchoolmychoice

இணையதளத்தின் முகவரி:  http:// www.downvids.net/ இந்த தளத்திற்குச் சென்று, நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய காணொளியின் இணைப்பை கொடுத்து,அருகில் உள்ள ‘download” பட்டணை அழுத்தினால் போதும்.

அதன் பிறகு ஓரிரு வினாடிகளில், உங்களுக்கு அந்த காணொளியைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கிடைக்கும்.அந்த இணைப்பை அழுதி காணொளியை சேமிக்கலாம். அல்லது அந்த இணைப்பின் மீது அழுத்தி “save as link” என்பதைத் தேர்ந்தெடுத்தும், காணொளியை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.