Home தொழில் நுட்பம் வெற்றியை நோக்கி மீண்டும் எச்டிசி நிறுவனம் !   

வெற்றியை நோக்கி மீண்டும் எச்டிசி நிறுவனம் !   

587
0
SHARE
Ad

htc-one-colors-610x356

கோலாலம்பூர், ஜூலை 7 – தைவான் நாட்டின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான எச்டிசி, சமீப காலமாக தான் பயணித்து வந்த தோல்விப் பாதையை மீண்டும் வெற்றிக்கு திருப்பி உள்ளது.

எச்டிசி நிறுவனம், கடந்த மூன்று காலாண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தது. கடந்த 2012-ம் ஆண்டு அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய எச்டிசி ஒன் தொடரின் எக்ஸ் மற்றும் எஸ் திறன்பேசிகள் வாடிக்கையாளர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானதால், அந்நிறுவனம் வர்த்தக ரீதியா கடும் நஷ்டத்தை சந்தித்தது.

#TamilSchoolmychoice

மேலும், மற்ற திறன்பேசிகளை தயாரிக்கும் நிறுவனங்களைக் காட்டிலும் ச்டிசி-யின் விளம்பரங்கள் மற்றும் திறன்பேசிகள் பற்றிய விவரங்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகியன சிறப்பானதாக இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில், அந்நிறுவனம் தனது திறன்பேசிகளின் உருவாக்கத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து தயாரித்த எச்டிசிஒன் எம் 8 (HTC ONE M 8)  திறன்பேசிகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக இந்தியா போன்ற பன்முகச் சந்தை கொண்ட நாடுகளில் வட்டார மொழிகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழ், இந்தி போன்ற மொழிகளுக்கான விசைப்பலகை‘ (Keyboard) மற்றும் எழுத்துருக்கள்‘ (Fonts) –ஐ எச்டிசிநிறுவனம் உருவாக்கியது அந்நிறுவனத்தின் மீதான தரத்தினை மேலும் உயர்த்தியது.

இது போன்ற தொடர் முயற்சிகள் மூலம் அந்நிறுவனம், நடப்பு காலாண்டில் சுமார் 92 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இலாபத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், எச்டிசி நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஒன் ஏஸ்‘ (One Ace) மற்றும் ஒன் மினி‘ (One Mini) திறன்பேசிகளும் ஹெச்டிசியின் இலாபத்தை தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.