நவம்பர் 26 – தைவான் நாட்டு செல்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹெச்டிசி (HTC) தனது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக அதில் சில சிறப்புகளை சேர்க்க முடிவெடுத்துள்ளது.
வழக்கமாக தற்போது சந்தையில் HTC செல்பேசிகள் சில்வர், கறுப்பு, நீலம், சிகப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதை ஆண்டிராய்டு செல்பேசிகளில் இது ஒரு ஐபோன் போன்றது என்றும் உதாரணமாகக் கூறப்படுகிறது.
அதற்கேற்றார் போல், ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது போல் தங்க நிறத்தில் தங்கள் செல்பேசிகளையும் வெளியிட HTC நிறுவனம் வெளியிடவுள்ளது.
இதே போல் சாம்சங் நிறுவனமும் Galaxy SIV என்ற தங்க நிற செல்பேசிகளை குறைந்த அளவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது.
ஆனால் இந்த தங்க நிற செல்பேசிகள் அனைத்தும் உண்மையான தங்கத்தினால் செய்யப்பட்டது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் நிறைய தங்க ஆபரணக் கடைகள் உண்மையான தங்கத்தினால் உங்களின் செல்பேசிகளுக்கு முலாம் பூசித் தருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.