தற்போது மீண்டும் கூகுளும், ஹெச்டிசி நிறுவனமும் கைகோர்க்க இருப்பது தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை இரு நிறுவனங்களும் இணைந்து திறன்பேசிகள் அல்லாது நெக்சஸ் 8 டேப்லெட் களை உருவாக்க உள்ளன. இந்த டேப்லெட்கள் எதிர்வரும் மூன்றாம் காலாண்டில் வெளியிடப்படலாம் என ஆருடம் கூறப்படுகின்றது.
கூகுளின் நெக்சஸ் 7 டேப்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்காததால் தற்போது நெக்சஸ் 8 டேப்லெட்களில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி, வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பினை பெறுவதற்காக ஹெச்டிசியுடன் இணைந்ததாக கூறப்படுகின்றது.