Home கலை உலகம் வீடு புகுந்து தாக்கியவன் கைது: சுருதிஹாசன் மகிழ்ச்சி

வீடு புகுந்து தாக்கியவன் கைது: சுருதிஹாசன் மகிழ்ச்சி

667
0
SHARE
Ad

Shruti-Haas 300-200

சென்னை, நவம்பர் 26- சுருதிஹாசனை வீடு புகுந்து தாக்கியவன் கைது செய்யப்பட்டான். இதனால் சுருதிஹாசன் மகிழ்ச்சியடைந்துள்ளார். தனது டுவிட்டரில் மர்ம மனிதனை பிடித்த காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கைதான ஆசாமி பெயர் அசோக் சந்தர் திருமூக்கே (வயது 45). இவர் போரிவிலி திரைப்பட நகரில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். ரகசிய கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இவரைப் பற்றி அடையாளம் தெரிந்தது. அசோக்சந்தர் மீது தாக்குதல், மானபங்கம் செய்தல், அத்து மீறி நுழைதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

#TamilSchoolmychoice

அசோக் சந்தரை காவல் துறையினர் பாந்திரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இன்று வரை காவல் அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் சுருதி ஹாசனை தாக்கவில்லை என்றும் அவரை சந்திக்க முயற்சி செய்ததாகவும் அசோக்சந்தர் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளான். அவரது குடும்பத்தினரும் சுருதியை தாக்கவில்லை என்று மறுத்துள்ளனர். தனது தம்பிக்கு வேலை கேட்கவே சுருதி வீட்டுக்கு சென்றார் என்று அசோக் சந்தர் சகோதரி ஷாலினி கூறியுள்ளார்.