Home நாடு முன்னாள் தேர்தல் ஆணையர் அம்னோவின் எடுபுடி – அம்பிகா

முன்னாள் தேர்தல் ஆணையர் அம்னோவின் எடுபுடி – அம்பிகா

670
0
SHARE
Ad

abdul rashidகோலாலம்பூர், நவ 26 – முன்னாள் தேர்தல் ஆணையர் அப்துல் ரஷித் அப்துல் ரஹ்மான்(படம்) பெர்காசாவில் இணைந்திருப்பது குறித்து கருத்துரைத்த பெர்சே இணைத்தலைவர் எஸ்.அம்பிகா ஸ்ரீனிவாசன், அவர் தேசிய முன்னணியின் கையாள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என்று தெரிவித்தார்.

ஆட்சியையும் அதிகாரமும் மலாய்காரர்களின் கைகளில் இருப்பதை உறுதிப்படுத்த தான் பெர்காசாவில் இணைந்ததாக  தெரிவித்த அப்துல் ரஷித், தனது பதவிக்காலத்தில் மூன்று முறை தேர்தல் தொகுதிகளை மாற்றியமைத்து மலாய்காரர்கள் ஆட்சியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்தை சுட்டிக்காட்டிய அம்பிகா, “தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் திருத்தியமைக்கப்பட்டாலும், மலாய்காரர்களின் ஆட்சி தான் இருக்கும். காரணம் அவர்கள் தான் நாட்டில் பெரும்பான்மையானவர்கள். ஆனால் இந்த திருத்தத்தால் ஆளும் கட்சி பயனடைந்தது என்று வேண்டுமானால் கூறலாம். இதை தான் நாங்கள் இத்தனை காலமாகக் கூறிவந்தோம். இப்போது அவரே அதை நிரூபித்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், இப்போது எங்களின் கவலை என்னவென்றால் நடப்பு தேர்தல் ஆணையமும்  இதேயே பின்பற்றி தொகுதி எல்லை சீரமைப்புகளை செய்து வருகிறதா என்பது தான் என்றும் அம்பிகா குறிப்பிட்டார்.

அப்துல் ரஷித்தின் கருத்தை நடப்பு தேர்தல் ஆணையம் ஒத்துக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ செய்ய வேண்டும். மௌனம் மட்டும் பதிலாகாது. எனவே நடப்பு தேர்தல் ஆணையம்  இது குறித்து தன்னிலை விளக்கம் தர வேண்டும் என்றும் அம்பிகா தெரிவித்தார்.