Home உலகம் சீனா: 2 கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி – 25 பேர் மாயம்

சீனா: 2 கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி – 25 பேர் மாயம்

877
0
SHARE
Ad

boat-sank_0

பீஜிங், நவம்பர் 26- சீனாவின் ஷண்டாங் மாகாணத்தின் கடற்பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கிய விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர்.

பயணிகள் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் நேற்று இரவு 9 மணி மற்றும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பலத்த காற்றினால் ஏற்பட்ட பேரலைகளில் சிக்கி கடலில் மூழ்கியது.

#TamilSchoolmychoice

இந்த விபத்துகளில் பலியான மூவரின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளது. நீரில் மூழ்கி காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என ஷண்டாங் மாகாண கடலோர காவல் படை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.