Home நாடு தமிழ்பள்ளிகளில் கூடுதலான பாலர் பள்ளி வகுப்புகள்

தமிழ்பள்ளிகளில் கூடுதலான பாலர் பள்ளி வகுப்புகள்

578
0
SHARE
Ad

LRP_8363eஜோகூர்பாரு, ஜூலை 7 – நாடெங்கிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் குறிப்பாக தோட்டப்புறங்களிலும் புற நகர் பகுதிகளிலும் அமைந்துள்ள தமிழ்ப் பள்ளிகளில் மேலும் கூடுதலான பாலர் பள்ளி வகுப்புகள் அமைக்கப்படும் என துணை கல்வியமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 523 தமிழ்ப்பள்ளிகளிலும் பாலர் பள்ளிகள் இருப்பதை உறுதி செய்யும் வண்ணம் அடுத்த சில ஆண்டுகளில் கட்டம் கட்டமாக இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

தற்போது 177 பள்ளிகளில் பாலர் பள்ளிகள் நடத்தப்பட்டு ஐயாயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தத் திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டை தமது அமைச்சு அரசாங்கத்திடம் கோரும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

நேற்று ஜோகூர் பாரு மாநிலத்திலுள்ள 70 தமிழ்ப்பள்ளிகளை சேர்ந்த 140 பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் துணை தலைமை ஆசிரியர்களை சந்தித்தப் பின்னர் கமலநாதன் இந்த விவரங்களை தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மாணவர்கள் கல்வியில் மேம்பாடு காண்பதற்கு இதுபோன்ற பாலர் பள்ளிகள் அவசியம் என்றும் தோட்டப்புறம் மற்றும் புற நகர்புறத்தில் உள்ளவர்கள் இந்த பாலர் பள்ளிகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்ப ஊக்குவிக்க வேண்டும்.

kamalanathan-685x320தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு

இதற்கிடையில், சில தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதை பற்றி கருத்துரைத்த அவர், தமது அமைச்சு 150க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 30 தமிழ்ப் பள்ளிகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் அதிகபட்சமாக 90 பள்ளிகள் பேராக்கில் அமைந்திருக்கின்றன. ஜொகூரில் 42 பள்ளிகளும் சிலாங்கூரில் 39 பள்ளிகளும், கெடாவில் 34 பள்ளிகளும், நெகிரி செம்பிலானின் 33 பள்ளிகளும் 150க்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கின்றன.

இந்த பள்ளிகளை இடம் மாற்றி அமைப்பதற்கு பள்ளி நிர்வாகங்கள் உள்ளூர் இந்திய தலைவர்கள், உள்ளூர் சமுதாயத்தினர் மற்றும் மாநில கல்வி அமைச்சு இலாகாக்கள் ஆகியோரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும் என்று கமலநாதன் கருத்துரைத்தார்.

இவர்கள் அனைவரும் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் பள்ளிகளை மாற்றி அமைப்பதற்கும், நிதி ஒதுக்கீடு பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார்