Home இந்தியா துப்பாக்கியை வைத்து மிரட்டிய வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் கைது!

துப்பாக்கியை வைத்து மிரட்டிய வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் கைது!

1142
0
SHARE
Ad

natarajanசென்னை, ஜூலை 8 – குற்றாலம் சொகுசு பங்களாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சசிகலாவின் கணவர் நடராஜனை சிற்ப வல்லுனருக்கு பேசிய பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்ததாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

அவரை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் மீது கராத்தே மாஸ்டரும் சிற்ப வல்லுனருமான ஹூசைனி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

009அதில், அவர் கூறியிருப்பதாவது, “தஞ்சை மாவட்டம் விளாரில் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் 98 லட்சம் ரூபாய் செலவில் ‘மறுமலர்ச்சி கரங்கள்’அமைக்க சசிகலாவின் கணவர் நடராஜன், அவரது நெருங்கிய நண்பர் இளவழகன், ‘ஏர்போர்ட்’ மூர்த்தி உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்தனர்.

#TamilSchoolmychoice

பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில், 75 லட்சம் ரூபாயை தந்த நடராஜன், மீதி 23 லட்சம் ரூபாயை தர முடியாது என்றார். இதனால்பணியை நிறுத்தி விட்டேன்.

இந்நிலையில், மீதி பணத்தை தருவதாக அழைத்ததால் நேரில் சென்றேன். அங்கு நடராஜன், இளவழகன், கார்த்தி மற்றும் இந்தி பேசிய நபர் ஒருவர் இருந்தார். திடீரென அவர்கள் பணியை துவங்குமாறு மிரட்டினர். ‘மீதி பணத்தை தந்தால் தான் மறுமலர்ச்சி கரங்கள் நிறைவு பெறும்’என தெரிவித்தேன்.

ஆத்திரமடைந்த அவர்கள் ஒரு பாட்டிலை எடுத்து வீசியதில் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டது. நடராஜன் துப்பாக்கியை காட்டி, ‘சுட்டுக் கொன்று விடுவேன்’ என மிரட்டினார். அவர்களின் பிடியில் இருந்து தப்பித்து உயிர் பிழைத்தேன்.

natarajan (1)பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து இருந்தார். இந்த புகார் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததால், குற்றாலத்தில் உள்ள சொகுசு பங்களாவில் ஓய்வில் இருந்த நடராஜனை நேற்று கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, ‘ஏர்போர்ட்’ மூர்த்தி, இளவழகன், கார்த்தி உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.