சாவ் பாலோ, ஜூலை 10 – மலேசிய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவும், நெதர்லாந்துவும் மோதின.
முழு ஆட்டமும் முடிந்த நிலையில் இரண்டு குழுக்களுமே கோல் எதுவும் அடிக்க முடியாமல் சரி சம நிலையில் இருந்ததால், கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
கூடுதல் அரை மணி நேரத்திலும் இரண்டு குழுக்களும் கோல் அடிக்க இயலாத நிலையில் பினால்டி கோல்கள் மூலம் வெற்றியை நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட்டது.
அர்ஜெண்டினா 4-2 என்ற கோல் எண்ணிக்கையில் பினால்டி கோல்களில் வெற்றி பெற்றது.
அந்த ஆட்டத்தின் படக் காட்சிகள்:
படங்கள் : EPA