Home கலை உலகம் ”குடும்பத்துடன் பார்க்கும் படங்களில் நடிப்பதை கடமையாக கருதுகிறேன்” – சூர்யா

”குடும்பத்துடன் பார்க்கும் படங்களில் நடிப்பதை கடமையாக கருதுகிறேன்” – சூர்யா

499
0
SHARE
Ad

suriya speechசென்னை, ஜூலை 12 – கணவன்-மனைவி-குழந்தைகள் என குடும்பத்துடன் பார்க்கும் படங்களில் நடிப்பதை என் கடமையாக கருதுகிறேன்” என்று நடிகர் சூர்யா கூறினார்.

சூர்யா-சமந்தா ஜோடியாக நடித்து, லிங்குசாமி இயக்கியிருக்கும் படம், ‘அஞ்சான்.’ திருப்பதி பிரதர்ஸ், யு.டி.வி. ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.

Anjaanஇந்த படத்தின் ‘டீஸர்’ சமீபத்தில் வெளியானது. அதை 2 நாட்களில், ‘யூ டியூப்’பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியிருக்கிறது. இதுதொடர்பாக நடிகர் சூர்யா, சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

”நான் நடிக்கிற எல்லா படங்களும் கணவன், மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் பார்க்கும்படி அமைகின்றன. முகம் சுளிக்கிற மாதிரி காட்சிகள் வருவதில்லை.

இதற்காக, என்னை வைத்து படங்களை இயக்கும் இடக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் என் கருத்துக்களை இயக்குநர்களிடம் திணிப்பதில்லை. அதுவாகவே நடக்கிறது.

Suriya-Tamil-movie-Anjaanஇந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் என் படங்களை விரும்பி பார்ப்பதற்காக அங்குள்ள தமிழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனால் வியாபாரமும் பெரிய அளவில் உள்ளது. எனவே அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கும்படியான கதைகளை தேர்வு செய்து நடிப்பது அவசியமாகிறது. இதை எனது கடமையாக கருதுகிறேன்.

அதிக படங்களில் நடிப்பதில், எனக்கு உடன்பாடு இல்லை. எண்ணிக்கையை விட, தரமான படங்களில் நடிப்பதைத்தான் முக்கியமாக கருதுகிறேன்.
‘அஞ்சான்’ படத்தில் கிருஷ்ணா, ராஜுபாய் என இரு வேடங்களில் நடித்திருக்கிறேன்.

anjaan-3கதைக்களம் மும்பை என்பதால் முழுக்க முழுக்க மும்பையிலேயே எடுத்த படம் இது. கடந்த வருடம் நவம்பர் முதல் ஜூன் வரை மும்பையிலேயே படப்பிடிப்பு நடந்தது. இந்த படம் தொடர்பாக, இயக்குநர் லிங்குசாமி சில புத்தகங்களை என்னிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

நானும் படித்தேன். லிங்குசாமி திறமையான இயக்குநர். அவருடைய இயக்கத்தில் நடித்தது, மகிழ்ச்சியான அனுபவம். ரசிகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்வதில், நான் ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக, ‘பேஸ்புக்’கில் விரைவில் இணைவேன். அதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது” என சூர்யா கூறினார்.