Home தொழில் நுட்பம் சீனாவின் வியூகம் ஆப்பிளின் வர்த்தகத்தை பாதிக்குமா?

சீனாவின் வியூகம் ஆப்பிளின் வர்த்தகத்தை பாதிக்குமா?

655
0
SHARE
Ad

Apple Store in Hamburgபெய்ஜிங், ஜூலை 14 – சீனாவில் அதிகரித்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகத்தை தடுக்கும் நோக்கத்துடன் அந்நாட்டு அரசு சில திரை மறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

சமீபத்தில் சீன அரசின் செய்தி நிறுவனம்ஆப்பிளின் தயாரிப்புகளான ஐபோன்களைஅந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் கருவியாக அறிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சூடு பிடித்துள்ள இந்த விவகாரத்தில் சீனா அரசு செய்தி நிறுவனம், ஆப்பிளின் வர்த்தகத்தை கெடுக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் 25 சதவீதத்துக்கு மேலான விற்பனை சீனாவில் தான் நடைபெறுகின்றது. இதனை தடுக்கும் நோக்கத்துடனும்சீனாவில் திறன்பேசிகளை உற்பத்தி செய்யும் அந்நாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கத்துடனும் சீனா, இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக ஆப்பிள் வட்டாரங்கள் கூறுகின்றன.

#TamilSchoolmychoice

மேலும், உலக நாடுகளை ஒப்பிடுகையில், ஆப்பிள் ஐபோன்கள் சீனாவில் தான் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. காரணம், மற்ற நாடுகளை விட சீனாவில் தான், ஆப்பிளுக்கு அதிக மதிப்பு கூட்டு வரி (சுமார் 17 சதவீதம்) விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனா செய்தி நிறுவனத்தின் குற்றச்சாட்டிற்கு ஆப்பிள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்த மறுப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“விமர்சிக்கப்பட்டுள்ள அந்த செயலியானது பயனர்களின் பணிகளை துரிதப்படுத்தவும், தொலைதூர பயணங்களின் போது வாடிக்கையாளர்களுக்கு உதவும் நோக்கத்துடனும் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலியானது கட்டாயமற்ற‘ (optional) ஒன்று.”

“பயனர் விரும்பினால் அந்த செயலியின் இயக்கத்தை நிறுத்தி வைக்க இயலும். ஆப்பிள் எந்தவொரு செயலியும் அரசின் உளவு அமைப்பை சார்ந்தோ, கூட்டு வைத்தோ செயல்படவில்லை. மக்களிடையே இந்த விவகாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தச் செய்த சீன அரசு செய்தி நிறுவனத்திற்கு எங்கள் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

திரை மறைவாக சீனா ஆப்பிளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் முயற்சிகள் எத்தகைய பலனை அளிக்கும் என வரும் காலாண்டுகளில் தெரிய வரும்.