Home உலகம் காஸாவில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

காஸாவில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!

610
0
SHARE
Ad

GTY_iraq_unrestகாஸா, ஜூலை 14 – காஸாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கெதிரான தாக்குதலில், இஸ்ரேல் அடுத்தக் கட்டத்தை நெருங்கி உள்ளது. அந்த பகுதிகளில் இராணுவப் படையைக் கொண்டு தரைவழித் தாக்குதலைத் தொடங்கி உள்ளது.

நேற்று, பாலஸ்தீனத்தின் காஸா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேலின் தரைப்படை, தீவிரவாதிகளுக்கு எதிரான விரிவான தாக்குதலைத் தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது காஸா நகரில் இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள ராக்கெட் ஏவுதளங்களை கண்டறிந்து அழிப்பதற்காக இஸ்ரேல் இராணுவம் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.”

“முன்னதாக, வடக்கு காஸா பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பாக வீடுகளை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் விமானத்தின் மூலம் எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை சனிக்கிழமை வீசியுள்ளது.” என்று அவர் தெரிவித்தார்.

israel-pounds-gazaஅதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஐ.நா. அகதிகள் முகாமில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

ஐ.நா சபை மற்றும் உலக நாடுகளின் சமாதான அமைப்புகள் போர் நிறுத்தத்தை அறிவிக்கும் படி இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு கோரிக்கை விடுத்தும், அங்கு இன்னும் அமைதி திரும்பவில்லை. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 160-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.