Home தொழில் நுட்பம் ஆப்பிளின் ஐபோன் 6-க்கு போட்டியாக புதிய திறன்பேசியினை களமிறக்க தயாராகும் சாம்சுங்!

ஆப்பிளின் ஐபோன் 6-க்கு போட்டியாக புதிய திறன்பேசியினை களமிறக்க தயாராகும் சாம்சுங்!

483
0
SHARE
Ad

samsung

கோலாலம்பூர், ஜூலை 16 – சாம்சுங் நிறுவனம் ஆப்பிளின் ஐபோன் 6-க்கு போட்டியாக புதிய அதிநவீன வசதிகள் கொண்ட திறன்பேசியினை தயாரித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

தொழில்நுட்ப உலகில் ஆப்பிள் மற்றும் சாம்சுங் இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. தனித்தன்மை வாய்ந்த திறன்பேசிகளை இரு நிறுவனங்களும் உருவாக்கி வருகின்றன. எனினும் பல தருணங்களில் ஆப்பிளின் கையே ஓங்கியுள்ளது. இந்நிலையில் ஆப்பிள் தனது அடுத்த படைப்பான ஐபோன் 6-ஐ உருவாக்கி வரும் நிலையில், சாம்சுங் அதற்கு போட்டியாக தனது தயாரிப்பினை களமிறக்க ஆயத்தமாகி வருகின்றது.

#TamilSchoolmychoice

‘கேலக்சி அல்ஃபா’ (Galaxy Alpha) என தற்சமயம் பெயரிடப்பட்டுள்ள இந்த  திறன்பேசிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட சாம்சுங் தீர்மானித்துள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.

சாம்சுங் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தி, அதிக வரவேற்பை பெற்ற கேலக்ஸி S5 திறன்பேசிகளின் பாதிப்பில் இந்த சாம்சுங் அல்ஃபா திறன்பேசிகள் உருவாகி வருவதாக கூறப்படுகின்றது. எனினும், இந்த திறன்பேசிகள் கேலக்ஸி S5 மற்றும் கேலக்ஸி நோட் ஆகியவற்றின் கலவையாக இருக்கும் என சாம்சுங் வட்டாரங்கள் கூறுகின்றன.

கேலக்சி அல்ஃபா திறன்பேசிகளின் சிறப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களை  சாம்சுங் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும், வரும் மாதங்களில் ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்கள் வெளியிட இருக்கும் திறன்பேசிகள் அந்நிறுவனங்களின் அடுத்த காலாண்டு இலாபத்தை தீர்மானிக்கும் என்பது மட்டும் நிச்சயம்.