பெர்லின், ஜூலை 15 – உலகக் கிண்ணத்தை அர்ஜெண்டினாவுக்கு எதிராக வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள ஜெர்மனி நாட்டின் காற்பந்து குழுவினருக்கு, இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினில் வீர வரவேற்பு நல்கப்பட்டது.
1954, 1974 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வென்றுள்ள ஜெர்மனி இந்த தடவை நான்காவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.
24 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை வென்ற சாதனை ஒருபுறம் இருக்க, தென் அமெரிக்க மண்ணில் உலகக் கிண்ணத்தை வென்றுள்ள முதல் ஐரோப்பியக் குழுவாகவும் ஜெர்மனி திகழ்கின்றது.
கடந்த மூன்று முறை மேற்கு ஜெர்மனியாக கிண்ணத்தை வென்று வந்துள்ள குழு, இந்த முறை ஒன்றுபட்ட ஜெர்மனியாக கிண்ணத்தை முதன் முறையாக வென்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆயிரக்கணக்கானோர் திரண்ட – ஜெர்மன் குழுவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவின் படக் காட்சிகள்:
ஜெர்மனியின் ஓரே கோலை அடித்து வெற்றிக்கு வழிவகுத்த மரியோ கோயட்ஸ் (இடது) மற்றும் அண்ரே ஸ்கூரல்லே மக்கள் கூட்டத்தின் முன்னே உலகக் கிண்ணத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
ஜெர்மன் விளையாட்டாளர்களின் உற்சாகக் கொண்டாட்டம்….
ஜெர்மன் குழுவினரை வரவேற்க உற்சாகத்தோடு ஆயிரக்கணக்கில் திரண்ட ஜெர்மன் காற்பந்து இரசிகர்களின் கொண்டாட்டம்
காற்பந்து திடலில் விளையாட மட்டும்தான் எங்களுக்குத் தெரியும் என நினைக்கிறீர்களா? எங்களுக்கு மேடையில் நடன ஆட்டம் போடவும் தெரியும் என்பதை உற்சாகத்தோடு ஆடிக் காட்டும் ஜெர்மன் குழுவினர்….
இதோ உங்களுக்காக – நாங்கள் கொண்டு வந்திருக்கும் உச்சகட்டப் பரிசு, உலகக் கிண்ணம் – என திரண்டிருந்த மக்கள் முன்னே கிண்ணத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஜெர்மன் விளையாட்டாளர் பாஸ்டியன் ஸ்க்வெய்ன்ஸ்டெய்கர்…
படங்கள் : EPA