Home உலகம் ஆப்கன் தேர்தல்: குளறுபடிகளைத் தவிர்க்க வாக்குப் பதிவினை முழு தணிக்கை செய்ய முடிவு!

ஆப்கன் தேர்தல்: குளறுபடிகளைத் தவிர்க்க வாக்குப் பதிவினை முழு தணிக்கை செய்ய முடிவு!

519
0
SHARE
Ad

Afkhan-Electionகாபூல், ஜூலை 16 – ஆப்கானிஸ்தானில் இருமுறை நடந்த தேர்தலிலும் பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளதால், முறைகேடுகளை தவிர்க்க வாக்குப்பதிவினை முழுதணிக்கை செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனையை ஏற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலீபான் ஆட்சியிலிருந்து அமெரிக்காவின் ஆதரவில் விடுபட்டாலும், நிலையான ஜனநாயக ஆட்சி அமைய ஆப்கானிஸ்தான் கடுமையாக போராடி வருகின்றது. அதிபர் தேர்தலில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதால் அங்கு நிலையான ஜனநாயக ஆட்சி அமையாமல் இருந்து வருகின்றது.

இந்நிலையில், வாக்குப்பதிவினை முழுதணிக்கை செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனையை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான அஷ்ரஃப் கானி அகமதுசாய் வரவேற்றுள்ளார்.

#TamilSchoolmychoice

afghan-presidential-candidaஇது தொடர்பாக அஷ்ரஃப் கானிக்கும், அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லாவுக்கும் இடையே கடந்த சனிக்கிழமை புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டது.

இது தொடர்பாக அஷ்ரஃப் கானி செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ஆப்கானிஸ்தானில் ஓர் நிலையான தேசிய அரசை ஏற்படுத்துவதற்கான அஸ்திவாரமாக இந்த வாக்குத் தணிக்கை இருக்கும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்துல்லா அப்துல்லாவுடன் புதன்கிழமை (இன்று) நேரில் பேசவுள்ளேன்.”

AFGHANISTAN-UNREST-ELECTION-RESULT“அப்போது, இரு தரப்பினர் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் வகையிலான புதிய அரசை நிறுவுவது குறித்து இருவரும் விரிவாக விவாதிக்கவுள்ளோம்.”

“ஆப்கானிஸ்தானில் கடந்த காலங்களில் ஏற்பட்ட மோசமான விளைவுகள் மீண்டும் வந்துவிடக்கூடாது என்ற அச்ச உணர்வால் அந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.” என்று கூறினார்.

இரு வேட்பாளர்களுக்கும் இடையே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டதாகக் கூறப்படுகின்றது.