Home நாடு எஸ்டோனியன் அழகி மரணம்: மேலும் 4 பேர் கைது!

எஸ்டோனியன் அழகி மரணம்: மேலும் 4 பேர் கைது!

551
0
SHARE
Ad

rejinaஜோகூர் பாரு, ஜூலை 16 -எஸ்டோனியன் அழகி ரெஜினா சூசலு மரணம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட மேலும் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை குறித்து ஜோகூர் குற்றப்புலனாய்வு பிரிவின் துணை ஆணையர் டத்தோ ஹஸ்னான் ஹஸ்ஸான் கூறுகையில்,“இந்த வழக்கு விசாரணைக்கு இவர்கள் நான்கு பேரும் உதவ முடியும் என்ற காரணத்திற்காக கைது செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டவர்கள் 24 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் என்றும், நேற்று இவர்களை ஜோகூர் மெர்சிங் என்ற இடத்தில் காவல்துறை கைது செய்ததாகவும் ஹஸ்னான் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 6 பேர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஹஸ்னான் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 1 -ம் தேதி தன் காதலனுடன் புலாவ் ராவா தீவிற்கு விடுமுறைக்கு சென்றிருந்த சூசலு, கடலில் மூழ்கியிருக்கலாம் என்று நம்பப்பட்டார்.

பின்னர், பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் காயங்கள் இருந்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் இவ்வழக்கை 302 -ன் சட்டப்பிரிவின் கீழ் கொலை வழக்காக பதிவுச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.