Home நாடு எஸ்டோனியன் அழகி மரணம்: சந்தேகத்தின் பேரில் காதலர் கைது!

எஸ்டோனியன் அழகி மரணம்: சந்தேகத்தின் பேரில் காதலர் கைது!

557
0
SHARE
Ad

rejinaஜோகூர், ஜூலை 11 – எஸ்டோனியன் அழகி ரெஜினா சூசலுவின் மரணம் கொலையாக இருக்கலாம் என்ற காவல்துறை சந்தேகப்படுவதால், அவரது காதலரான ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த துங்கு ரெஸா துங்கு இப்ராகிம் உட்பட 7 பேரை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 29 வயதான துங்கு ரெஸா இப்ராகிம் துங்கு, ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவர் என்ற விபரமும் காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 11 -ம் தேதி, தாமான் சென்சுரி அருகிலுள்ள ஜாலான் செரிகாலா அருகே 5.84 கிராம் அளவிலான கேனபிஸ் என்ற போதை வஸ்துவை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டு, கடந்த மே மாதம் நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அவரது மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், கடந்த மே 12 -ம் தேதி, 7000 ரிங்கிட் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

இதனிடையே, தற்போது அவரது காதலியான ரெஜினா சூசலுவின் மரணம் தொடர்பாகவும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூலாவ் ராவாவில் உள்ள ஒரு கடற்கரையில், ரெஜினா சூசலுவின் உடல், கடந்த ஜூலை 1 -ம் தேதி கண்டுப்பிடிக்கப்பட்டது.

அவர் கோலாலம்பூரில் இருந்து ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அத்தீவுக்கு வந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

அவரின் உடலில் சந்தேகத்துக்குரிய வகையில் சில காயங்கள் காணப்பட்டதால் காவல் துறையினர் அவரின் மரணம் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் இவ்வழக்கை விசாரிக்கின்றனர்.

உருக்கமான பேஸ்புக் பதிவு

ரெஜினா சூசலுவின் மரணத்திற்குப் பிறகு 1 வாரம் கழித்து, ரெஸா இப்ராகிம் துங்கு தனது பேஸ்புக் இடுகையில் தனது காதலி பற்றி உருக்கமாக சில வற்றை எழுதியுள்ளார்.

அதில், “ஜூலை 1 -ம் தேதி என் வாழ்வில் மிக மோசமான சோகம் நிறைந்த நாள்.

இந்த நோன்பு மாதத்தில், எனக்கு நல்ல காதலியாகவும், தோழியாகவும் இருந்த எனது ரெஜினா என்னை விட்டு பிரிந்துவிட்டாள்”.

என் மீது அன்பும் பாசமும் நிறைந்த அவளது இதயத்தை என் வார்த்தைகளால் விமர்சிக்க முடியாது”.

உன்னை மீண்டும் சந்திக்கும் வரை, ஐ லவ் யூ பேபி, நீ என்னென்றும் என் இதயத்தில் குடி கொண்டுள்ளாய்என மிக உருக்கமாக ரெஸா இப்ராகிம் எழுதியுள்ளார்.