Home இந்தியா இந்திய மீனவர்களின் பிரச்சனை குறித்து இலங்கை அமைச்சர் பெரீஸ் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு!

இந்திய மீனவர்களின் பிரச்சனை குறித்து இலங்கை அமைச்சர் பெரீஸ் – சுஷ்மா சுவராஜ் சந்திப்பு!

664
0
SHARE
Ad

Sushma Swarajபுதுடெல்லி, ஜூலை 11 – இந்தியா மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் இந்தியா வந்துள்ளார். இவர், இன்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை  சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அப்போது இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும், பிரச்சனைகள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

இந்திய மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுப்பது பற்றி பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.