காசா, ஜூலை 11 – பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் மீதான இஸ்ரேல் இராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் பலர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் இராணுவத்திற்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்குமிடையே நடைபெற்று வரும் மோதல் தீவிரமடைந்து வருகின்றது. இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தின் 750 இடங்களில் விமானங்கள் மூலம் தொடர் குண்டு மழை பொழிந்து வருகின்றது.
தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி வருகின்றனர். இதில் 4 வயதான சிறுமி ஒருத்தியும், 5 வயதான சிறுவன் ஒருவனும் அடங்குவர் என கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்துடன், ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவ் மீது ஏவுகணைகளை வீச ஹமாஸ் இயக்கத்தினர் தயாராகி வருவதாக பாலஸ்தீனிய தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் கலவரம் தொடர்பாக ஐ.நா. பொது செயலாளர் பான்-கி-பூன் தலைமையில் முக்கிய கூட்டம் இன்று நடைபெற இருக்கின்றது.