ஜோகூர், ஜூலை 11 – ஜோகூர் அரச பரம்பரையைச் சேர்ந்தவரான தெங்கு அலாங் ரெஸா இப்ராகிமின் காதலியான எஸ்தோனியன் அழகியின் மரணம் ஒரு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தோடு காவல் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
எஸ்தோனியன் அழகியான ரெஜினா சூசலுஆரம்பத்தில் கடலில் முழ்கிவிட்டதாக அனைவரும் எண்ணினர். அவரின் உடல் பூலாவ் ராவாவில் உள்ள ஒரு கடற்கரையில் கடந்த ஜூலை 1 -ம் தேதி கண்டுப்பிடிக்கப்பட்டது.
அவர் கோலாலம்பூரில் இருந்து ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அத்தீவுக்கு வந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
அவரின் உடலில் சந்தேகத்துக்குரிய வகையில் சில காயங்கள் காணப்பட்டதால் காவல் துறையினர் அவரின் மரணம் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் இவ்வழக்கை விசாரிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் இவ்வழக்கை 302 பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர்.ஆறு நபர்கள் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சூசலுவின் காதலனும் இவ்வழக்கு விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஜோகூர் குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் ஹஸ்னான் ஹஸான் கூறுகையில் “இவர்கள் ஆறு பேர் அச்சம்பவத்தின் போது அத்தீவில் காணப்பட்டவர்கள். நாங்கள் விசாரணையின் இடையில் இருப்பதால் இவ்வழக்கைப் பற்றி எதுவும் தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல்,இறுதியாக சூசலுதனது அறையிலிருந்து வெளியாகி துறைமுக அணைகரையில் நடந்து சென்றதை விடுதி ஊழியர்கள் பார்த்துள்ளனர். ஆனால் அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லை என்று சூசலுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சூசலுவின் நெருங்கிய தோழி ஜோசியா மிஜுகுமி கூறுகையில், அவர் அதிக நேரம் தன் காதலனுடன் பூலாவ் ராவாவில் செலவு செய்தார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அவர் மரணத்திற்கு அறிகுறியாக எந்த ஒரு சந்தேகப்படும்படியான செயல்களைநான்அவரிடம்காணவில்லை.அதுமட்டுமல்லாமல்அவர்குடும்பத்தினருடன்மிகவும் பிரியமானவர் அல்ல.அவர் அவர்களுடன் உரையாடுவதை காண்பதே மிகவும் அரிது” என்று கூறியுள்ளார்.
“சூசலுவின் மரணத்திற்கு பிறகு அவருடைய அண்ணன் அடிக்கடி தொடர்புக் கொண்டு என்ன ஆகியது என்று நண்பர்களிடம் வினவுவார்.ஆனால் இப்பொழுதெல்லாம் அவர் அழைப்பது இல்லை” என்றும் மிஜூகுமி கூறியுள்ளார்.
இதனிடையே, பெயர் வெளியிட விரும்பாத சூசலுவின் இன்னொரு தோழி ஒருவர் கூறுகையில், “சமீப காலமாக சூசலுக்கும் அவளுடைய காதலனுக்கும் இடையிலான உறவுசுமூகமாகஇல்லை. அனைவர்முன்னிலையிலும்சண்டைப்போட்டுக்கொண்டனர்”என்று தெரிவித்துள்ளார்.