Home இந்தியா 2014-15 ஆம் ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டின் முழுவிபரம்!

2014-15 ஆம் ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டின் முழுவிபரம்!

501
0
SHARE
Ad

Arun Jaitelyடெல்லி, ஜூலை11 – மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாடாளுமன்ற அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.

*புதுச்சேரிக்கு பேரிடர் நிதி உதவியாக ரூ188 கோடி ஒதுக்கீடு.

*குத்துச் சண்டை, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் விளையாட்டுகளுக்கு புதிய பயிற்சி மையங்கள்.

#TamilSchoolmychoice

*2014-15ல் மொத்த செலவுகள் ரூ. 17,94 லட்சம் கோடியாக இருக்கும். வரிகள் குறைப்பால் தொலைக்காட்சி, கணினி, குளிர்சாதன பெட்டி விலை குறையும்.

0மத்திய பட்ஜெட்டில் ரூ.7529 கோடி புதிய வரிகளை அருண் ஜேட்லி விதித்தார்.

*காலணிகளுக்கான உற்பத்தி வரி 6 சதவிகிதமாக குறைப்பு. சிகரெட் மீதான வரி 11 சதவீதத்தில் இருந்து 72 சதவீதமாக உயர்வு.

*ஆயத்த ஆடை ஏற்றுமதியை ஊக்குவிக்க வரிச்சலுகை அளிக்கப்படும். வண்ணத்தொலைக்காட்சி,செல்பேசி விலை குறைகிறது. எல்சிடி தொலைக்காட்சி மீதான இறக்குமதி வரி ரத்து.

*கச்சா,பாமாயில் எண்ணெய் இறக்குமதி வரி ரத்து.

*மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.98,000 கோடி ஒதுக்கீடு.

*சேமிப்பு பண திட்டத்தில் செலுத்தும் பணத்துக்கு ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு.. முன்பு இது ரூ. 1 லட்சமாக இருந்தது.

*வீட்டுக்கடன் வட்டி செலவுக்கான கழிவு 2 லட்சமாக உயர்வு.

*ரூ.1000 கோடி செலவில் எல்லைப்புறங்களில் ரயில்பாதை அமைக்கப்படும்.

*நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரூ 100 கோடி ஒதுக்கீடு. நாட்டின் முக்கிய நதிகளை தூய்மைப்படுத்த 276 கோடியில் திட்டம்.

*பொருள்களை விவசாயிகள் நேரடியாக விற்க உழவர் சந்தை திட்டம்.

*கங்கை நதி பாதுகாப்புக்காக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

*ராணுவ வீரர்களுக்கு பதவிக்கேற்ற வகையில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்.

Union-Budget-of-India*இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விமான நிலையங்கள் அமைக்கப்படும்.

*நாடும் முழுவதும் 15 கி.மீ எரிவாயு குழாய் அமைக்க திட்டம்.

*குழந்தைகள் சேமிப்பை ஊக்குவிக்க சிறப்பு திட்டம்.

*நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கப்படும்.

*போர் நினைவு சின்னங்கள் அமைக்க 100 கோடி ஒதுக்கீடு.

*ராஜஸ்தான், தமிழகத்தில் சோலார் திட்ட மையம் அமைக்கப்படும்.

*ரூ.13,635 கோடியில் புதிதாக 16 துறைமுகங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் ஜவுளிப்பூங்கா அமைக்க ரூ200 கோடி ஒதுக்கீட.

*நடுத்தர மற்றும் சிறு,குறுந்தொழில் மேம்பாட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

*விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி துவங்கப்படும்.தேசிய அளவில் வேளாண் சந்தைகள் அமைக்கப்படும்.

*கிராமப்புற கடன் நிதியத்துக்கு 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.2014-15-ஆம் ஆண்டில் 8 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்கப்படும்.

arunjetli*விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அட்டை வழங்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*அசாமில் வேளாண் தொழிநுட்ப பல்கலைக்கழகம் அமைக்கப்படும். ஹரியனாவில் தோட்டகலை பல்கலைகழகம் அமைக்கப்படும். ராஜஸ்தான் மற்றும் ஆந்திராவில் வேளாண் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும்.

*20 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட நகர்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும்.

*பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ 100 கோடி ஒதுக்கீடு.சமுதாய வானொலிகள் அமைக்க 100 கோடி ஒதுக்கப்படும்.

*சாலையில் செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.

*கிராமப்புரத்தில் மின்வசதியை மேம்படுத்த 500 கோடி. கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.900 கோடி ஒதுக்கீடு.

*நாட்டின் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை மற்றும் நீர்பாசன திட்டங்களுக்கு 1000கோடி ஒதுக்கீடு.