Home இந்தியா எய்ட்ஸ் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம்!

எய்ட்ஸ் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம்!

612
0
SHARE
Ad

indiamapநியூயார்க், ஜூலை 18 – எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் வரிசையில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

10 பேரில் ஒருவருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. பாலியல் தொழிலாளர்கள் மூலமாக நோய் பரவும் சதவீதம் 10.3 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாக குறைந்துள்ளதாகவும்,

ஆனால் இது அசாம், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்து இருப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்கா முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு எய்ட்ஸ் நோயால் 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

 

Comments