Home நாடு எம்எச்17 பேரிடர்: பயணிகளுள் மலேசிய ஷெல் நிறுவனத்தின் 3 பணியாளர்களும் அடங்குவர்!

எம்எச்17 பேரிடர்: பயணிகளுள் மலேசிய ஷெல் நிறுவனத்தின் 3 பணியாளர்களும் அடங்குவர்!

595
0
SHARE
Ad

WW88043பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18 – உக்ரைனில் விழுந்து நொறுங்கிய எம்எச்17 விமானத்தில் பயணித்தவர்களில், மலேசிய ஷெல் எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பணியாளர்கள் இருந்தனர் என்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 3 பணியாளர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

ஷெல் நிறுவனம் அந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆம்ஸ்டெர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூருக்கு நேற்று இரவு புறப்பட்ட எம்எச்17 விமானம், கிளர்ச்சியாளர்களால் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த பாதக செயலை செய்தது ரஷ்ய ஆதரவாளர்களா? அல்லது உக்ரைன் கிளர்ச்சியாளர்களா என்று உண்மையைக் கண்டறியும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.