பேஸ்புக், டிவிட்டர் போன்ற ஊடகங்களில் பரப்பப்படும் யூகங்களையும், வதந்திகளையும், காணொளிகளையும் உண்மையென்று நம்பி அதை அடுத்தவர்களுக்கு பரப்ப வேண்டாம் என்றும் தகவல்தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சரான ஷாபெரி சீக் குறிப்பிட்டார்.
மேலும், “விமானப் போக்குவரத்து நிபுணர்களை விட நீங்கள் திறமையானவர்கள் என்று எண்ணிக் கொண்டு தேவையில்லாத வதந்திகளையும், ஆரூடங்களையும் பரப்பாதீர்கள்” என்றும் ஷாபெரி சீக் தெரிவித்தார்.
விமானப் பேரிடருக்கு காரணமானவர்கள் யார் என்பதை விசாரணையின் மூலம் அறியும் மலேசிய அரசாங்கத்தின் முயற்சிக்கு, மக்கள் தங்களது முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும் என்றும் ஷாபெரி சீக் கேட்டுக் கொண்டார்.