Home இந்தியா கருப்பு பண விவகாரம்: இந்திய அதிகாரிகளுக்கு சுவீஸ் அரசு அழைப்பு!

கருப்பு பண விவகாரம்: இந்திய அதிகாரிகளுக்கு சுவீஸ் அரசு அழைப்பு!

520
0
SHARE
Ad

UBS Secretsபுதுடெல்லி, ஜூலை 21 – சுவீஸ் வங்கியில் இந்தியர்கள் ரகசியமாக  வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க  மத்திய அரசு தீவிர நடவடிக்கை  எடுத்து வருகிறது. கருப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டியலை  தரும்படி சுவீஸ் அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இது  தொடர்பாக பல்வேறு கட்டங்களில் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.  இந்நிலையில், இது குறித்து ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக  ஆலோசனை நடத்த வரும்படி சுவீஸ் அரசு அழைப்பு விடுத்து, இந்திய  அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக அந்நாட்டு நிதி அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

black money2013-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுவீஸ் தேசிய வங்கியில்  இந்தியர்கள்  போட்டு வைத்துள்ள பணம் 14,100 (ம்லேசிய ரிங்கிட் 775,00,000,00) கோடி என்றும் அந்த வங்கி  சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் சுட்டிகாட்டியுள்ளது.