Home கலை உலகம் குஷ்பூ ஃபிகரா இல்லையா?: விஜய் டிவி டிடியின் பகீர் கேள்வி!

குஷ்பூ ஃபிகரா இல்லையா?: விஜய் டிவி டிடியின் பகீர் கேள்வி!

887
0
SHARE
Ad

ajith-kushbooசென்னை, ஜூலை 21 – விஜய் விருதுகள் விழாவில் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, நடிகை குஷ்பு ஃபிகரா இல்லையா? என்று பார்வையாளர்களை பார்த்து பகீர் கேள்வி கேட்டார்.

விஜய் விருதுகள் வழங்கும் விழாவை விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி தொகுத்து வழங்கினார். டிடி பேசினால் நிறுத்த மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

விழாவில் குஷ்பு சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை கௌதம் கார்த்திக்கிற்கு வழங்கினார். கௌதமுடன் அவரது தந்தை கார்த்திக்கும் மேடைக்கு வந்தார்.

#TamilSchoolmychoice

அப்போது மௌன ராகம் படத்தில் வரும் கார்த்திக்கின் அந்த பிரபல வசனத்தை பேசுமாறு டிடி கேட்க, அதற்கு பொண்ணு வேண்டுமே என்று கார்த்திக் கூறினார்.

ddஅதற்கு டிடி அது தான் குஷ்பு இருக்கிறாரே என்று கூறினார். அத்துடன் நிற்கவில்லை டிடி. குஷ்பு இப்பவும் ஃபிகர் தான் என்று கூற, அதை கேட்ட குஷ்பு வெட்கப்பட்டார்.

உடனே டிடி பார்வையாளர்களை பார்த்து குஷ்பு ஃபிகரா இல்லையா? என்று கேட்டார். உடனே பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும். டிடி தான் முதலில்.