Home நாடு எம்எச்17 எண்ணிற்குப் பதிலாக எம்எச்19 – மாஸ் நிறுவனம் அறிவிப்பு!

எம்எச்17 எண்ணிற்குப் பதிலாக எம்எச்19 – மாஸ் நிறுவனம் அறிவிப்பு!

524
0
SHARE
Ad

MAS logo 440 x 215கோலாலம்பூர், ஜூலை 21 – எம்எச்17 விமானம் எதிர்பாராத விதமாக பேரிடரில் சிக்கியதால், தங்களது விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் அந்த எண்ணிற்கு விடை கொடுத்துள்ளது.

இது குறித்து மாஸ் நிறுவத்தின் ஊடகம் மற்றும் வியூக தொடர்புப் பிரிவின் மேலாளர் கைருன்னிசக் டஸுன் நூரின் கூறுகையில், “எம்எச்17  எண் வரும் ஜூலை 25 -ம் தேதியோடு விடைபெறுகின்றது. அதற்குப் பதிலாக புதிய விமான குறியீட்டு எண் எம்எச்19 அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு இடையிலான விமான சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இந்த சேவை தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த வருடத்தில் எண் மாற்றம் செய்யப்படும் மூன்றாவது விமான இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.