நியூயார்க், ஜூலை 21 – இலங்கையில் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு விசாரணை நடத்த மூன்று நாடுகளை தேர்வு செய்துள்ளது.
அவை,அமெரிக்காவின் நியூயார்க், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் தாய்லாந்தின் பாங்காக் ஆகிய நகரங்களிலிருந்தே ஐக்கிய நாடுகளின் விசாரணைக்குழு சாட்சிகளைப் பதிவு செய்யவுள்ளது.
ஆனாலும், இலங்கைக்குள் விசாரணைகளை நடத்துவதற்கான அனுமதியை சம்பிரதாயபூர்வமாக ஐக்கிய நாடுகள் கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.